கொரோனா மரணங்கள் அரசின் கணக்கை விடவும் அதிகமா? மத்திய அரசு விளக்கம்

0 2792

நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை அரசு அறிவித்ததை விட பலமடங்கு அதிகம் என்று வெளியான ஆய்வறிக்கைகளை தவறு என மத்திய அரசு மறுத்துள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது 34 முதல் 49 லட்சம் வரை இருக்கும் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அபிஷேக் ஆனந்த் மற்றும் அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசின் கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இறப்புகள் நடந்துள்ளதாக மற்றோர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மறுத்துள்ள மத்திய அரசு கொரோனா காலகட்டத்தில் நிகழ்ந்த எல்லா மரணங்களுக்கும் நோய்த் தொற்று காரணமில்லை எனவும், கொரோனா இறப்புகள் முறையாக மாநில அரசுகளால் பதிவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments