ராஜ் குந்த்ரா செய்ததாக கூறப்படும் குற்றம் சமூக நலனுக்கு தீங்கானது: மும்பை நீதிமன்றம்

0 2608

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளி ரையான் தோர்ப்பே  மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சமூக நலனுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆபாச வீடியோ எடுத்த புகாரில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ் குந்தரா ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

ராஜ் குந்த்ராவை கைது செய்த போலீசாரின் நடவடிக்கை சரியே என்றும் சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் இது போன்ற குற்றங்களை கடந்து சென்று விட முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments