முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது..! பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்

0 3250

மிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் 21-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை, 3 நாட்கள் நடைபெற்றபின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

துறைவாரியாக கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்த ஆய்வுக் கூட்டங்கள் முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

துறைவாரியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments