"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 8 மாநிலங்களில் அதிகரிப்பு.. மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 8 மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழு தலைவர் வி.கே.பால், இந்தியாவில் கொரோனா 2வது அலை இன்னும் ஓயவில்லை என்றார்.
வைரஸ் பரவும் விகிதத்தை கணக்கிடும் ஆர் நம்பர், 0.6 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆர் நம்பர் விகிதம் 1க்கு அதிகமாகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
Comments