ஆடிக் கிருத்திகையும்...மீன் குழம்பும்... கொலை முயற்சியில் திடீர் ட்விஸ்ட்..! கணவன் தற்கொலை....

0 4405
ஆடி கிருத்திகை நாளில் மீன்குழம்பு வைத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவியைத் தாக்கிய குடிகார கணவன், மயங்கி விழுந்த மனைவி இறந்துவிட்டதாக எண்ணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

ஆடி கிருத்திகை நாளில் மீன்குழம்பு வைத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவியைத் தாக்கிய குடிகார கணவன், மயங்கி விழுந்த மனைவி இறந்துவிட்டதாக எண்ணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. கட்டுக்கடங்காத கோபமும், நிதானமில்லாத போதையும் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு, சான்றாக அமைந்த சம்பவத்தின் பின்னணி குறித்த செய்தித்தொகுப்பு.... 

சென்னை கொரட்டுர் அக்ரகாரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் குமார். இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன் மற்றும் ஜீவா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பெயிண்டரான குமார் குடிக்கு அடிமையானவன் எனக் கூறப்படும் நிலையில், ஆன்மிக விஷயங்களிலும் அதிக நாட்டமுள்ளவர் என்கிறார்கள். இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை நாளான திங்கட்கிழமை இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு குமார் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது, மனைவி துர்கா மீன் குழம்பு சமைத்து கணவனுக்கு பரிமாறியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஆடிக் கிருத்திகை நாளன்று ஏன் மீன் குழம்பு வைத்தாய் என மனைவியிடம் கேட்டுள்ளார்.

இந்த பிரச்சனையில் தொடங்கிய உரையாடல், வாக்குவாதமாக மாறிய நிலையில், வீட்டில் இருந்த மகன்கள் இருவரும் அருகிலுள்ள துர்காவின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். சில மணி நேரங்கள் கழித்து வீட்டுக்கு வந்த மகன்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும், தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குமாரின் சடலத்தை மீட்டு கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட துர்காவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, துர்காவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆடிக்கிருத்திகை அன்று மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், குடிபோதையில் இருந்த குமார், மனைவி துர்காவை கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் துர்கா மயங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மயங்கி கிடந்த மனைவியை பார்த்து அவர் இறந்துவிட்டதாக எண்ணிய குமார், பயந்து போய் தனது வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments