தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 3437
தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை செப்டம்பர் மாதம் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக ஐஐடி தெரிவித்த நிலையில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை செப்டம்பர் மாதம் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக  ஐஐடி தெரிவித்த நிலையில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியையும் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தற்போது கையிருப்பில் பனிரெண்டரை லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments