கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா பகுதியில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்
கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் கோக்ரா பகுதியில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் பகுதியில் இருந்து துருப்புக்களை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை என சீனா தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியை பொறுத்த வரை தனது எல்லைக்குள் மட்டுமே படைகளை நிறுத்தி உள்ளதாக சீன தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரு தரப்பு படைகளை வாபஸ் பெறுவது குறித்த 12 ஆவது கூட்டம், அசல் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள மோல்டாவில் நடந்தது.
சீனாவின் ஒப்புதலை தொடர்ந்து, கோக்ராவில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு இரண்டு நாட்களில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments