பில் கேட்ஸ்-மெலிண்டா விவாகரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் அவரது மனைவி மெலிண்டாவும் விவாகரத்து செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்த இந்த இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக 3 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
வாஷிங்டன் மாநில விதிகளின் படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்குப் பிறகே அது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அதன்படி வாஷிங்டன் கிங் கவுன்டி நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பிரிவதாக முடிவெடுத்த போது இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சொத்துக்களை பிரித்துக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
விவாகரத்து நிபந்தனைகளின் படி அந்த சொத்துக்களின் மதிப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விவாகரத்தை அறிவித்த நேரத்தில் பில்கேட்ஸ் தம்பதியிடம் சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
Comments