கலைஞரின் திருஉருவப்படம் திறப்பு மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன் - முதலமைச்சர்
மகளிர் நலன் காப்பதில் முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது தமிழ்நாடு சட்டப்பேரவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு உண்டு என்றார்.
சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித்தீர்மானத்தை நிறைவேற்றியது, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணத்தை செல்லுபடியாக்கிச் சட்டம் இயற்றியதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றியவர் கலைஞர் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மதிநுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத் திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களாலும் கலைஞர் போற்றப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.
Comments