ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூட்டம்

0 2772

எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் பெகாஸஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளிகளால் கடந்த 10 நாட்களாக முடங்கியுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காண பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் சுதிப் பந்தோபத்யாயா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றத்தை முடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதிக்க ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அடுத்து வரும் நாட்களில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments