மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்

0 2916

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், 25 மாவட்டங்களில் அனைத்துக் கடைகளையும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மும்பையில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பு 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அது 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீதப் பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் முடிதிருத்த நிலையங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் மால்கள் திறக்கப்பட்ட போதும் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.மின்சார புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிப்பது பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.அத்தியாவசியப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமே தற்போது மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments