"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அதானி ஏர்போர்ட் என்கிற பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கி உடைத்தெறிந்த சிவசேனா தொண்டர்கள்
மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் அதானி ஏர்போர்ட் என வைக்கப்பட்ட பெயர்ப் பலகையைச் சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
மும்பை சாந்தாகுரூசில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சத்ரபதி சிவாஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றை இதுவரை ஜிவிகே நிறுவனம் கவனித்து வந்தது.
அந்த நிறுவனத்திடம் இருந்த 50 விழுக்காடு பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் 74 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளதால் ஜூலை 13 முதல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட அதானி நிறுவனம் விமான நிலையத்தின் நுழைவாயிலில் அதானி ஏர்போர்ட் என்கிற பெயர்ப்பலகையை வைத்துள்ளது.
இதைக் கண்டித்துள்ள சிவசேனா கட்சியினர், பெயரை மாற்ற அதானி நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறிப் பெயர்ப்பலகை அடித்து நொறுக்கினர்.
Comments