கேரளாவில் கல்வியமைச்சர் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைகால்களைப் பிடித்துத் தூக்கிச் சென்ற காவலர்கள்

0 2300

கேரளக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து சிவன்குட்டி பதவி விலகக் கோரித் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைகால்களைப் பிடித்துத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

2015ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டுப் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிவன்குட்டி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த இளைஞரணியினரும் மாணவரணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கைகால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments