நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? - ஓ.பன்னீர்செல்வம்

0 5004

நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்சக் கட்டணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments