தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன்
இந்தியாவில் தனது தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தாக்கல் செய்த அதிவிரைவு ஒப்புதல் விண்ணப்பத்தை, ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் வாபஸ் பெற்று விட்டதாக தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான காரணம் எதையும் ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது Janssen COVID-19 தடுப்பூசியை இந்தியாவில் கிளினிகல் சோதனை நடந்த அனுமதி கோருவதாக கடந்த ஏப்ரலில் ஜான்சன் & ஜான்சன் தெரிவித்தது.
அந்த நேரத்தில் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியை போட்டு சோதனை நடத்தப்பட்டவர்களில் சிலருக்கு அபூர்வமான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனவே அமெரிக்காவில் இந்த தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments