சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து - 2 பேர் உயிரிழப்பு

0 8951

ஈரோட்டில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, அவரது நண்பரை ஏற்றிக் கொண்டு டி.வி.எஸ். 50 பைக்கில் நேற்று மாலை சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த இன்னோவா கார், அவர்கள் மீது பலமாக மோதியது. இதில், பைக்கில் வந்த இருவரும் சில அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாக சென்னிமலையை சேர்ந்த ஜெயபிரகாஷை கைது செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்றதால் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments