கொரோனா பரவல் எதிரொலி ; மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை தற்காலிகமாக மூடல்
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பூக்களைக் கொண்டு வந்து இந்த ஒருங்கிணைந்த மலர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் இன்று காலை முதலே பூக்களை வாங்க அண்ணா நகர், விளக்குத்தூண், காளவாசல், புத்தூர், அவனியாபுரம், பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சந்தையில் குவிந்தனர்.
இந்த நிலையில் திடீரென மலர் சந்தைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், அங்கு வியாபாரிகளும் பொதுமக்களும் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாலும் இருப்பதைப் பார்த்து, சந்தையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.
Comments