பஞ்சாபில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு ; 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதி
பஞ்சாபில், அமிர்தசரஸ், பட்டியாலா நகரங்கள் உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
ஒன்று முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின. மாணவர்கள் சொந்தமாக சானிடைசர் மற்றும் முககவசங்களை கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரே வகுப்புகளை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஒவ்வொரு வகுப்பிலும் 50 சதவிகித மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன.
ஆன்லைன் வகுப்புகளும் தொடரும் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்துதான் தீர வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. உத்தரகாண்டிலும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்காக இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
Comments