இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? -ஐதராபாத் மற்றும் கான்பூர் IIT ஆராய்ச்சியாளர்கள் தகவல்

0 7487
இந்த மாதமே 3 ஆம் அலை துவங்கி விடும்? -ஐதராபாத் மற்றும் கான்பூர் IIT ஆராய்ச்சியாளர்கள் தகவல்

ந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அது வரும் அக்டோபரில் அது உச்சத்தை தொடக்கூடும் என்றும் ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அலையின் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது அலையின் போது தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது போன்ற அளவுக்கு 3 ஆவது அலை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 3 ஆவது அலையின் போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments