அசாம், மிசோரம் எல்லைப் பிரச்னை..! செயற்கைக்கோள் வரைபடம் மூலம் தீர்வு காண மத்திய அரசு முடிவு
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்கு செயற்கைக் கோள் வரைபடம் மூலம் தீர்வு காண இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நடுநிலை விசாரணை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
கலவரம் நடந்த பகுதியில் அமைதி திரும்புவது அவசியம் என்பதற்காக அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒரு நிரந்தரத் தீர்வுக்காக, வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தின் மூலம் செயற்கைக்கோள் வரைபடம் தயாரிக்க இருப்பதாகவும், அதன் மூலம் பிரச்னையைத் தீர்க்க முடியும் எனவும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
Comments