டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்

0 5009
பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து மூன்றாமிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பேட்மின்டன் அரையிறுதி ஆட்டங்களில் தோற்ற பி.வி.சிந்து, சீனாவின் ஹே பிங்ஜியாவோ ஆகியோரிடையே வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் 21க்கு 13, 21க்கு 15 என்கிற நேர் செட்களில் வென்ற சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஏற்கெனவே மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. பிரேசில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றதும் குறிப்பிடத் தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments