வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை சாட்டிலைட் மேப்பிங் வாயிலாக வரையறுக்கும் திட்டம் துவக்கம்

0 3690
வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை சாட்டிலைட் மேப்பிங் வாயிலாக வரையறுக்கும் திட்டம் துவக்கம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையை தீர்க்க, எல்லைகளை சாட்டிலைட் மேப்பிங் வாயிலாக வரையறுக்கும் திட்டம் துவங்கி உள்ளது.

அதன்படி, வடகிழக்கு மாநில கவுன்சிலும், விண்வெளித்துறையின் கீழ் உள்ள NESAC என்ற அமைப்பும் சேர்ந்து , விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இனி வடகிழக்கு மாநிலங்களின் எல்லைகளை அறிவியல்பூர்வமாக வரையறுக்கும்.

இந்த அறிவியல்பூர்வமான திட்டத்தை மேற்கொள்ளலாம் என சில மாதங்களுக்கு முன்னர் வடகிழக்கு மாநில கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை தெரிவித்திருந்தார்.

எல்லை தொடர்பாக அசாமுக்கும், மிசோரத்திற்கும் இடையே பிரச்சனை நீடிக்கும் நிலையில் , அதை அறிவியல்பூர்வமாக வரையறுத்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்த சிக்கலும் இன்றி அதை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments