கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி தாய்லாந்து பிரதமரைக் கண்டித்து பிரமாண்ட வாகனப் பேரணி

0 3632
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி தாய்லாந்து பிரதமரைக் கண்டித்து பிரமாண்ட வாகனப் பேரணி

கொரோனா தொற்றை திறம்பட கையாளத் தவறியதாகக் கூறி, தாய்லாந்து பிரதமருக்கு எதிராக பிரமாண்ட வாகனப் பேரணி நடைபெற்றது. ஊரடங்கால் பொருளாதாரம் பாதிப்பு, தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தாய்லாந்து அரசு மீதான அதிருப்தி அதிகரித்தது.

தலைநகர் பாங்காக்கில் கார்கள் மற்றும் பைக்குகளில் திரண்ட எதிர்ப்பாளர்கள் ஹாரன் அடித்தும், ஹங்கர் கேம்ஸ் திரைப்பட பாணியில் மூன்று விரல்களில் சல்யூட் அடித்தும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட போதும் எதிர்ப்பாளர்களின் வாகனங்கள் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments