ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை

0 5156

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் (Emma McKeon) ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

நூறு மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி, மகளிருக்கான நானூறு மீட்டர் பிரீஸ்டைல் தொடர்நீச்சல், மகளிருக்கான நானூறு மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கலப்பு நானூறு மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், நூறு மீட்டர் பட்டர்பிளை நீச்சல், மகளிருக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றதும் குறிப்பிடத் தக்கது. அமெரிக்க நீச்சல் வீரர் காலேப் டிரசல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 பதக்கம் வென்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments