நள்ளிரவில் ஊருக்குள் ஜாலியாக சுற்றித்திரியும் கரடி-சிசிடிவி காட்சி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் கரடி சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டைவிளைபட்டி கிராமத்தில் அவ்வபோது கரடிகள் சுற்றித்திரிந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு கிராமத்திற்குள் புகுந்த கரடி சாலையில் உலா வந்து ஒரு வீட்டின் பின்புறம் சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் ஊருக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments