சொத்து தகராறில் பஞ்சாயத்து பேச வந்த உதவி ஆய்வாளரை தாக்கிய பெண்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா நகரில், ,உறவினர்களுக்கு இடையேயான சொத்து தகராறை தீர்த்து வைக்க வந்த உள்ளூர் காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிய பெண் அவரை சரமாரியாக தாக்க முயலும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
அம்மாள் என்ற இந்த பெண்மணி, சொத்து தகராறு பற்றி பஞ்சாயத்து பேச வந்த எஸ்ஐ ராஜனை முதலில் கீழே தள்ளி விட்டார். அதை எஸ்ஐ யுடன் வந்த வார்டு கவுன்சிலர் ஜேக்கப் ஜார்ஜ் என்பவர் தனது செல்போனில் படம் எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன அம்மாள், கவுன்சிலரையும் தாக்க முயல இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்தது…
ஒருவழியாக அம்மாளை கீழே தள்ளி விட்டு கவுன்சிலர் தனது செல்போனுடன் தப்பிச் சென்றாலும், ஆத்திரம் அடங்காத அம்மாள் கீழே கிடந்த கற்களை எடுத்து அவரை நோக்கி சரமாரியாக வீசினார். எஸ்ஐயும், கவுன்சிலரும் தப்பித்தோம் பிழைத்தோம் என இடத்தை காலி செய்தனர். சம்பவத்தில் எஸ்ஜ காயமின்றி தப்பினாலும் புறமுதுகிட்டு ஓடிய கவுன்சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அம்பாள் மீது லோக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments