ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது
ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி 22 ஆயிரத்து 197 கோடி ரூபாய் என்றும் மாநில ஜிஎஸ்டி 28 ஆயிரத்து 541 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக 57 ஆயிரத்து 864 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இதில் சரக்கு இறக்குமதி வாயிலாக 27 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், செஸ் துணை வரியாக 7 ஆயிரத்து 790 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது என அறிக்கை ஒன்றில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments