ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஓடிய அமெரிக்க வீராங்கனை ; உற்சாகத்தில் துள்ளி குதித்த கணவர்
ஒலிம்பிக் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட பந்தயத்தில் ஓடிய மனைவியை, அமெரிக்காவில் இருந்து திரையில் பார்த்தபடி, துள்ளி குதித்து உற்சாகப்படுத்திய கணவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் தேசிய ஃபுட்பால் லீக்-ன் ஒரு அணியின் வீரராக இருக்கும் டேவிட் ப்லௌக் தனது மனைவி மெல்லிஸா கோன்ஸாலெஸ் பங்குபெற்ற பந்தயத்தை மிச்சிகனில் இருந்தபடி அவரது அணியினருடன் திரையில் பார்த்தார்.
பந்தயம் ஆரம்பமானது முதலே மெல்லிஸாவை ஊக்கப்படுத்திய டேவிட் மனைவி மெல்லிஸா இரண்டாவதாக முடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதால் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தார்.
Comments