அனைவருக்கும் பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்க வேண்டும்-முதலமைச்சர் அறிவுரை

0 4415

னைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் நிதிநிலை அறிக்கையும் வேளாண் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என அமைச்சர்களுக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை உழவர்கள், வேளாண் வல்லுநர்கள், உழவர் சங்கங்களைக் கலந்தாலோசித்து உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கித் தயாரிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பொருளாதார வல்லுநர்கள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மீனவர் சங்கத்தினர் ஆகியோரைக் கலந்தாலோசித்து அனைத்துப் பிரிவினருக்கும் பயன்தரும் வகையில் பொது நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவும் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments