பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை-கல்வியாளர்களின் முக்கிய ஆலோசனைகள்
பொறியியல் கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள் ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்ய முன் எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது பற்றி கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்யும் முன் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒரு பாடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்றால் அந்த பாடத்தை எதற்காக நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உறவினரோ, குடும்ப நண்பரோ எடுத்து படித்தார் என்பதற்காகவே அதே படிப்பை நாமும் எடுத்து படிக்க வேண்டும் என அவசியம் கிடையாது.
எந்தவித கட்டாயத்திற்காகவும் ஒரு படிப்பை நாம் தேர்வு செய்யக்கூடாது. விரும்பாமல் எடுக்கும் பாடப்பிரிவில் 4 ஆண்டுகள் ஆர்வம் இல்லாமலே படிப்பதுடன், படித்து முடித்த பிறகும் வாழ்க்கை முழுவதும் விருப்பமில்லாமல் ஒரு துறையில் பணியாற்ற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்..
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ECE போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும்போது பிற்காலங்களில் கூடுதலாக Specialization Course
படித்தும் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் Artificial Intelligence, Mechatronics, Aeronautical போன்ற தனித்துவமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் போது மிகுந்த கவனத்தோடு தேர்வு வேண்டுமெனவும் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிடித்த பாட பிரிவா அல்லது பிடித்த கல்லூரியா என்று கேள்வி வரும்போது பிடித்த பாடப் பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரணம் ஒரு சிறந்த கல்லூரி என்பதற்காக மட்டுமே விருப்பமே இல்லாத ஒரு படிப்பை எடுத்துப் படிப்பதன் மூலம் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போவதுடன், எதிர்கால வேலைவாய்ப்பிலும் இது பிரதிபலிக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர்...
ஒரு மனிதனுடைய வேலை மற்றும் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தியாக கல்லூரிப்படிப்பு இருப்பதனால் அந்த படிப்பை தேர்வு செய்வதற்கு முன் நன்கு யோசித்து நமக்கு ஏற்ற,ஆர்வமான துறையில் படிப்பதுதான் சாலச் சிறந்தது...
Comments