பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்குத் தண்ணீரைத் திறக்க தமிழக அரசு ஆணை
மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு இன்று முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதேபோல், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
Comments