புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட முக்கியத் தீவிரவாதி உள்பட 2 பேர் சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கியத் தீவிரவாதி உள்பட இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
முகமது இஸ்மல் அல்வி என்ற லம்பூ ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்தவன் .இரண்டாவது தீவிரவாதி சமீர் தர் புல்வாமாவைச் சேர்ந்த உள்ளூர்வாசி .இருவருமே வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவன் லம்பூ என்று காஷ்மீர் ஐ.ஜி.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார் .
இத்தாக்குதலில் மொத்தம் 19 தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இதில் ஏழு பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
Comments