புதுச்சேரியில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15 ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள உத்தரவில் , கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய தளர்வாக, திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்கப்பட்டு, அதில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதித்து இரவு 9 மணி வரை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் உடன் இணைந்து உள்ள பார்களில் 50சதவீதம் பேர் அமர்ந்து மது அருந்தலாம் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments