பாஜக எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

0 3905

முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தமது பாஜக எம்பி பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த முகநூல் பதிவை அவர் நீக்கிவிட்டார். ராஜினாமாவுக்கான காரணம் கேட்ட போது அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லை என்றும் கூற வேண்டியதை  கட்சித் தலைமைக்குக் கடிதம் மூலம் கூறிவிட்டதாகவும் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராகத் தீவிரமான பிரச்சாரத்தில் பாபுல் சுப்ரியோ ஈடுபட்டார்.

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பாபுல் சுப்ரியோ நீக்கப்பட்டதே அவரது ராஜினாமாவுக்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments