கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. பக்தியால் பரவசம்..!

0 4904
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. பக்தியால் பரவசம்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பக்திபரவசத்தால் இலந்தை மர முள் படுக்கை மீது  நடந்து சென்று பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இங்கே முள் படுக்கையை பஞ்சி மெத்தையாக பாவித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர் அம்மனின் பக்தர்கள்

விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மறவர் பெருங்குடியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி விழாவை யொட்டி பாரம்பரியமுறைப்படி அம்மன் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட இழந்தை மர முள் படுக்கையில் அமர்ந்தபடியும், நின்ற படியும், ஆடியபடியும்
பக்தர்கள் போட்டி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்

கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு விழாவும் நடத்தப்படாத நிலையில், தற்போது அனுமதி கிடைத்த நிலையில் ஆண்களும் பெண்களும் அக்னிச்சட்டி எடுத்து வந்தும், பக்தி பரவசத்தால் முள் மீது ஏரி வந்தும் அம்மனை வேண்டினர்

தலைமுறை தலைமுறைகளாக நடத்தப்பட்டு வந்த இந்த விழா கடந்த ஆண்டு நடத்தப்படாததால் இந்த ஆண்டு நேர்த்திக்கடன் செலுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments