மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்று அவசியம் ; கர்நாடகா அரசு

0 3792
மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்று அவசியம்

மஹாராஷ்டிரா, கேரளாவில் இருந்து வருவோர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்று கட்டாயம் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து கர்நாடகத்திற்கு இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகட்டிவ் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள், பேருந்துகள், விமானம் மட்டுமில்லாமல் தனி வாகனத்தில் வருவோரும் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்று கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் மகராஷ்டிராவை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் புதிதாக சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments