மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலா லம்பூரில் போராட்டம்
மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலா லம்பூரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் பல மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள போதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததால் பிரதமருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியது. கோலா லம்பூரில் பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகளுடன் திரண்ட இளைஞர்கள் அவசரக் காலச் சூழலை திறம்படக் கையாளததால் பிரதமர் பதவி விலகுமாறு கோஷங்கள் எழுப்பினர். இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் மலேசியாவில் 17,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Comments