12ஆம் வகுப்புத் தேர்வுக்குத் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3175
12ஆம் வகுப்புத் தேர்வுக்குத் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவின் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்ததாகவும், அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேர்வெழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும், விருப்பத்தின் அடிப்படையில் தேர்வெழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாகத் தங்களை அறிவிக்கும்படி கோர முடியாது என்றும் ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments