தொலைதூரக் கல்வி மூலம் மேற்படிப்பு முடித்தவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர்நீதிமன்றம்

0 4148

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதிவுத் துறையில் 2-ம் நிலை சார் பதிவாளராக தேர்வான செந்தில்குமார் என்பவர், முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் தொலை தூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் அவரது கோரிக்கை வணிகவரித்துறையால் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, வணிகவரித்துறை உத்தரவை ரத்து செய்து, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற  தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments