ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

0 4638

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க அணியை நான்குக்கு மூன்று என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

ஆடவருக்கான வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அதானு தாஸ் ஆறுக்கு நான்கு என்கிற புள்ளிக் கணக்கில் ஜப்பானிய வீரரிடம் தோல்வியடைந்தார்.

ஆடவருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 48 முதல் 52 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் கொலம்பிய வீரரிடம் தோல்வியடைந்தார்.

மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மவுட்கில், தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிவிட்டனர்.

மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஏ பிரிவில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை நான்குக்கு மூன்று என்கிற கோல் கணக்கில் வென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments