சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக 9 பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைப்பு..!

0 12554

கொரோனா முன்னெச்சரிக்கையாக சென்னை தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம், அமைந்தகரை, ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் கடைகள், மார்க்கெட்டுகள் அடுத்த மாதம் 9-ந் தேதி காலை வரை செயல்பட மாநகராட்சி தடை விதித்தது.

இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், தியாகராய நகரில் அனைத்து துணிக்கடைகள், நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நடைமேடைக் கடைகளும் திறக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையும் வெறிச்சோடி காணப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments