உ.பியில் ஒரு கிராமத்தின் அவலநிலையை உணர்த்த பாஜக எம்எல்ஏவை கழிவு நீரில் நடக்க வைத்த பொதுமக்கள்

0 5279

உத்தரப்பிரதேசத்தில் தங்கள் கிராமத்தின் அவலநிலையை உணர்த்த பாஜக எம்எல்ஏவை பொதுமக்கள் கழிவு நீரில் நடக்க வைத்தனர்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருப்பதால் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் சுறுசுறுப்பாக மக்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஹபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கமல் மாலிக் என்பவர் தனது தொகுதிக்குட்பட்ட தோல்பூர் என்ற கிராமத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றார். அங்கு அவரை முற்றுகையிட்ட கிராமத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து தங்கள் கிராமத்தின் அவலநிலையை அவருக்கு உணர்த்த வீதியில் தேங்கியிருந்த கழிவு நீரில் வெற்றுக் கால்களால் நடந்து போகுமாறு கட்டாயப்படுத்தினர். வேறு வழியின்றி கமல் மாலிக் அதில் நடந்து சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments