அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 3629
அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இதேபோல் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீதும், திமுகவின் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மீதும் சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. இந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், மேல் நடவடிக்கைகளைக் கைவிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments