கிருஷ்ணகிரியில் உறவினர்கள் கைவிட்டதால் சுண்ணாம்புக்கற்களை விற்று பிழைப்பு நடத்தும் வயதான தம்பதி

0 4228
கிருஷ்ணகிரியில் உறவினர்கள் கைவிட்டதால் சுண்ணாம்புக்கற்களை விற்று பிழைப்பு நடத்தும் வயதான தம்பதி

கிருஷ்ணகிரி அருகே சுண்ணாம்பு விற்று பிழைப்பு நடத்தும் வயதான தம்பதிகளுக்கு முதியோர் உதவிதொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சூளகிரியை சேர்ந்த பெரியண்ணன்-வெங்கடம்மா தம்பதி நூறு வயதைக் கடந்தவர்கள் என சொல்லப்படுகிறது.பெற்ற பிள்ளைகள் இறந்துவிட, பேரன் பேத்திகளும் இவர்களை கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

உதவின்றி தவிக்கும் இந்த தம்பதி,சூளகிரியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் சுண்ணாம்பு கற்களை சேகரித்து,அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறது. இவர்களுக்கு அரசு உதவிதொகை வழங்கிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments