இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 12ஆவது சுற்றுப் பேச்சு சனிக்கிழமை நடைபெற உள்ளதாகத் தகவல்
இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 12ஆவது சுற்றுப் பேச்சு சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனப் படையினர் முந்தைய நிலையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் வந்தனர். இதுதொடர்பான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனப் படையில் பலரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து மோதலைத் தவிர்க்கவும் எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்கள் நடைபெற்றன. இந்நிலையில் 12ஆவது சுற்றுப் பேச்சு சனியன்று பகல் பத்தரை மணிக்குச் சீனப் பக்கத்தில் உள்ள மால்டோ என்னுமிடத்தில் நடைபெற உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அப்போது ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா குன்றுப் பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வது குறித்துப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments