மது போதையில் போட்டி போட்டு வாகனத்தை இயக்கியதால் விபத்து

0 4742
மது போதையில் போட்டி போட்டு வாகனத்தை இயக்கியதால் விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாடா ஏஸ் வாகனத்துடன் போட்டி போட்டுச் சென்ற பொலீரோ பிக்கப் வாகனம் அதன் பின்பக்கம் மோதியதில் டாடா ஏஸ் வாகனம் செண்டர் மீடியனில் மோதி சாலை நடுவே கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பல்லடம் - உடுமலை சாலையில் வடுகபாளையத்தில் அரங்கேறிய இந்த விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தின் பின்பக்கம் மோதிய பொலீரோ பிக்கப் வாகனம் இடதுபுறம் இருந்த கருப்பராயன் கோவிலின் சுற்றுச்சுவரில் மோதி இடிபாடுகளில் சிக்கி நின்று கொண்டது.

விசாரணையில் பொலிரோ பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்தது உடுமலை பகுதியைச் சேர்ந்த மோகன் என்பதும் அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தது ஜல்லிபட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை இயக்கி வந்ததும் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments