ரஷ்ய விண்கலததால் கட்டுப்பாட்டை இழந்த பன்னாட்டு விண்வெளி நிலையம்
ரஷ்ய விண்கலம் இணைந்தபோது பன்னாட்டு விண்வெளி நிலையம் 45 நிமிடங்களுக்குக் கட்டுப்பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. வியாழனன்று ரஷ்யாவின் ஆய்வு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
அப்போது பன்னாட்டு விண்வெளி நிலையம் 45 நிமிடங்களுக்கு பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன்பின் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் நாசாவும், ரஷ்யச் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன.இதனால் அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.
Comments