தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

0 3204

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். நாளை முதல் 4 நாட்களுக்கும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments