எல்லைத் தகராறு: மிசோரமுக்குச் செல்ல வேண்டாம் என அசாம் மக்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்

0 3094

எல்லைத் தகராறு உள்ள நிலையில் மிசோரமுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அசாம் மக்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள பகுதிகளை மிசோரமும் உரிமை கொண்டாடும் நிலையில், அங்கு இருமாநிலக் காவல்துறையினரிடையே மூண்ட சண்டையில் அசாம் காவல்துறையினர் 6 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இருபுறமும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களைத் தவிரப் பிறர் அங்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் உள்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், எல்லைத் தகராறு தொடர்பாகப் பதற்றம் நீடிப்பதால் மிசோரமுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments