"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மத்தியக் கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் டெல்டா வகை தொற்றுப் பரவல்
டெல்டா வகை கொரோனா தொற்று மத்தியக் கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளதால், கொரோனா நான்காம் அலை தாக்கியுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான், ஈராக், துனீசியா, லிபியா உள்ளிட்ட 15 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவலும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் வாரத்துக்கு 3 லட்சத்துப் பத்தாயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 3500 பேர் உயிரிழந்ததாகவும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய மாதத்தை ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு 55 விழுக்காடும், உயிரிழப்பு 15 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் ஐந்தரை விழுக்காட்டினரே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடாதவர்களே பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளது.
Comments